Friday, May 25, 2012

டெஸ்க்டாப்பில் ஐகான்கள் அதிகமா?

மனம் போன போக்கில் டெஸ்க்டாப்பில் போல்டர்கள் மற்றும் பைல்களை சேவ் செய்து வைப்பது நம்மில் பலரிடையே இருக்கும் மோசமான பழக்கமாகும். இதனால், டெஸ்க்டாப்பில் தேவையற்ற ஐகான்கள் சிதறிக் கிடக்கும். ஒரு சிலர் தங்களுக்குப் பிடித்தவரின் புகைப்படங்கள், அல்லது தன்னுடைய போட்டோக்களை, பூஜிக்கும் தெய்வத்தின் படங்களைத் திரையில் டெஸ்க் டாப்பில் வைத்திருப்பார்கள். இந்த தேவையற்ற ஐகான்கள், அந்தப் படங்களில் உள்ளவரின், முகத்தில், கண்களை அல்லது வேறு பகுதிகளின் மேலாக அமர்ந்து, படத்தையே அசிங்கப்ப்டுத்தும் வகையில் இருக்கும்.


இதில் பெரும்பாலான ஐகான்கள், பயன்படுத்தப்படாமலேயே (வெகுநாட்கள் அல்லது மாதங்கள்) இருக்கும். சிலர் டவுண்லோட் செய்கையில், எங்கு டவுண்லோட் செய்தோம் என்று தெரிய, டெஸ்க்டாப்பிலேயே அவற்றை சேவ் செய்து வைப்பார்கள். பின்னர், அவற்றை வேறு சார்ந்த டைரக்டரிக்குக் கொண்டு சென்றாலும், டெஸ்க்டாப்பில் இருக்கும் ஐகானை அழிக்க மறந்துவிடுவார்கள். இதுவும் டெஸ்க்டாப்பில் குவியும் ஐகான்களின் எண்ணிக்கைக்கு ஒரு காரணமாகும்.

இணையத்தில் உலாவுகையில், குறிப்பாக வேலை வாய்ப்பு தளங்களில் செல்கையில், சில தளங்கள் நம்முடைய பெர்சனல் தகவல்களைக் கேட்கும். இவற்றிற்கு உடனடியாகத் தகவல்களை அனுப்ப, கையாளப்படும் பைல்களை, டெஸ்க்டாப்பில் போட்டு வைப்பார்கள். பேங்க் எண் போன்ற பெர்சனல் தகவல்கள் அடங்கிய பைல், வேலை வாய்ப்பு தேடுவதற்கான ரெஸ்யூமே எனப்படும் தகவல் குறிப்புகள் கொண்ட பைல்களை டெஸ்க் டாப்பிலும் பலர் சேவ் செய்து வைக்கின்றனர். இதனாலும் டெக்ஸ்டாப், சிதறிய குப்பை கொண்ட தட்டு போல காட்சி அளிக்கும்.

இதனை எப்படி சீர் செய்திடலாம். டெஸ்க்டாப்பிலேயே சில போல்டர்களை உருவாக்கலாம். இதில் பயன்படுத்தாத ஐகான்களை Unused Icons என்ற போல்டரை உருவாக்கி போட்டு வைக்கலாம். பெர்சனல் தகவல்கள் உள்ள பைல்களை மற்றும் இன்டர்நெட் சார்ந்து இயக்கப்படும் பைல்களை, இன்டர்நெட் என்று பெயரிட்டு ஒரு போல்டரில் வைக்கலாம். அடிக்கடி, அன்றாடம் பயன்படுத்தும் பைல்களை, அப்டேட் என்ற பெயரில் ஒரு போல்டரில் வைக்கலாம். இதன் மூலம் ஐகான்களின் எண்ணிக்கை குறைக்கப்படும். டெஸ்க்டாப் சுத்தமாக, அழகாகக் காட்சி தருவதுடன், இந்த ஐகான்களுக்கான பைல்களைத் தேடி எடுப்பதும் விரைவாக நடைபெறும்.

ஜகான்கள் டெஸ்க்டாப்பில் குவியும் போது விண்டோஸ் இதற்கென ஒரு நினைவூட்டும் செய்தியைத் தரும். அதற்கென ஒரு மெசேஜைக் காட்டி இவற்றை எல்லாம் எடுத்துவிடவா என்று கேட்கும். நம்மில் பலர், அந்த மெசேஜை அலட்சியப் படுத்திவிடுவோம். ஏனென்றால், இந்த வேலை மிகவும் முக்கியமாக்கும் என்ற எண்ணம் தான் நம் நினைவில் ஓடும். பயன்படுத்துகிறோமோ இல்லையோ இந்த ஐகான்கள் அப்படியே இருக்கட்டுமே என விட்டுவிடுவோம். விண்டோஸ் கொடுக்கும் மெசேஜைப் பின்பற்றினால், அதுவாகவே வெகுநாட்கள் பயன்படுத்தாமல் இருக்கும் ஐகான்களை ஒவ்வொன்றாகக் காட்டி வேண்டுமா, நீக்கவா என்று கேட்டு சரி செய்திடும். மேலே சொன்ன வழிகளில் ஒன்றைப் பின்பற்றி, நம் டெஸ்க்டாப்பினைச் சுத்தமாக வைத்திருப்பது என்றும் நல்லது. Download As PDF

No comments:

Post a Comment