Saturday, May 19, 2012

கம்ப்யூட்டர் சென்டர்களில் சரியான தெரிவு


எல்லாருக்கும்   வணக்கமுங்க நம்மோட முதல் பதிவை படிச்சு கமென்ட் சொன்ன நண்பர்களுக்கு வெரி வெரி தேங்க்ஸ். உங்களோட கமெண்ட்ஸ் தான் நம்மக்கு பூஸ்ட். so இந்த பதிவுகளை படிக்கிறதோட இல்லாம உண்மையான கமெண்ட்ஸ் சொல்லுங்க.

நாம முதல் பதிவில "கம்ப்யூட்டர் கல்வியும் யாழ்ப்பாணத்து கம்ப்யூட்டர் சென்டர்களும்" என்ற மேட்டர் பற்றி பாத்தம். இந்த பதிவில எப்பிடி கம்ப்யூட்டர் சென்டர்களில்  சரியான   தெரிவை மேற்கொள்ளலாம் என்பதை பாப்பம்.


பொதுவா எந்த ஒரு விசயத்தை செய்ய தொடங்க முதல்ல வடிவா, நிதானமா   திங் பண்ணனும், அதுக்கப்புறம் தான் செய்ய தொடங்கணும்.  எடுத்தம் கவுத்தம் எண்டு செய்தமேண்ட எல்லாம் சொதப்பிடும்.     

ஓகே நாம விசயத்துக்கு வருவம் நாம கம்ப்யூட்டர் கோர்ஸ் படிக்க வேணுமெண்ட ஒரு கம்ப்யூட்டர் சென்டிற்கு போவம். அப்பிடி போகமுதல் அந்த சென்டர் பற்றி நாம முதல்ல தெரிஞ்சுக்கணும். வெறுமனவே விளம்பரங்களை பாத்து நம்பாமை அதில படிச்ச உங்களுக்கு நம்பிக்கையனவங்களை விசாரிச்சு பாக்கணும்.
அப்புறமா நீங்களே நேரடிய போய் விசாரிக்கணும். எந்த பயமும் இல்லாமல் உங்களுக்கு தேவையான எல்லா விசயத்தையும் விசாரிக்கணும் ஏனெண்ட உங்கட காசை செலவழிச்சு படிக்க போறீங்க அதைவிட படிக்க போற 3,4 மாதங்களும் பயனுள்ளதாக இருக்க வேணும்.

முதல்ல கோர்ஸ் பற்றி வடிவா விசாரியுங்கோ நல்ல ஒரு செனட்டர் எண்டா படிப்பிக்கிற கோர்ஸ் ஒவ்வொன்றுக்கும் course பிளான் இருக்கும் முதல்ல அதைபற்றி வடிவ கேளுங்க. என்னென்ன ஏரியா கவர் பண்ண போறாங்க எவ்வளவு hours இல் கவர் பண்ண போறாங்க போன்ற details collect பண்ணுங்க. அதோட payment பற்றியும் சரியாய் details collect  பண்ணுங்கோ அதாவது முதல் பதிப்பில பாத்தது போல course  payment மட்டும் தானா இல்லாட்டி reg  paymet, course payment , எக்ஸாம் payment எண்டு நிறைய type  இருக்க  எண்டு  விசாரியுங்கோ.

இப்பிடி 3,4 செனட்டர் இல் விசாரிச்சு எது ஓகே வா இருக்கோ அந்த செனட்டரை செலக்ட் பண்ணுங்கோ. அப்பதான் நீங்க குடுக்கிற காசுக்கும் செலவழிக்கிற time இற்கும் usefulla இருக்கும்.

வெறும் certificate இற்காக படிச்சு எந்த use சும் இல்லை certificate இற்கு மதிப்பிருந்த காலம் போய் இப்ப knowledge மட்டும் பாக்கிற காலம். இதை ஏன் சொல்லிறநெண்ட நோர்மலா ms office படிக்கிறதுக்கே 5000/= - 150000/= course payment இருக்கு  தல நகரத்தில famous ஆ இருக்கிற சில சென்டர் இன்ட branch இலை 15000/= வரைக்கும் போகுது msoffice படிக்க. கேட்டா நாங்க famous என்றாங்க.

so எது எப்பிடியோ நாம ரைட்டா திங் பண்ணி கரெக்ட்டா நடந்தா ஓகே தான். அடுத்த பதிப்பில எடுத்ததுக்கெல்லாம் டிப்ளோம கோர்ஸ், டிப்ளோம கோர்ஸ் என்னுறான்களே அதெல்லாம் ஓகே தான எண்டு பாப்பம்.  
Download As PDF

1 comment: