Thursday, May 31, 2012

பக்கங்களை வேகமாக நகர்த்த

உங்களிடம் ஸ்குரோலிங் வீல் உள்ள மவுஸ் உள்ளதா? அப்படியானால் இந்த டிப்ஸை அவசியம் நீங்கள் படிக்க வேண்டும். டாகுமெண்ட்டில் ஒரு இடத்தில் உள்ள நீங்கள் 12 பக்கங்கள் முன்னரோ பின்னரோ உள்ள இடத்திற்குச் செல்ல விரும்புகிறீர்கள். என்ன செய்கிறீர்கள்? வேகமாக பக்கம் தாண்டிச் செல்லும் முயற்சிகளில் ஈடுபடுகிறீர்கள். சைட் பாரில் உள்ள கட்டத்தினை அழுத்தி இழுக்கப் பார்க்கிறீர்கள். என்ன ஆகிறது? நீங்கள் எதிர்பார்த்த இடத்திற்கும் முன்னாலோ பின்னாலோ டாகுமெண்ட் செல்கிறது.
இங்கே தான் மவுஸின் ஸ்குரோல் வீல் நமக்கு உதவுகிறது. ஏதேனும் ஒரு இடத்தில் மவுஸை வைத்து அதன் வீலை அழுத்திப் பிடிக்கவும். இதை அழுத்தியவுடன் இரு அம்புக் குறிகள் கொண்ட பெரிய கர்சர் ஒன்று தெரியும். இப்போது வீலை அழுத்தியவாறே மவுஸை முன்புறம் லேசாகத் தள்ளினால் அந்த திசையில் டெக்ஸ்ட் நகரத் தொடங்கும். எதிர்த்திசையில் லேசாக இழுத்தால் உடனே டெக்ஸ்ட் சுழல்வது நிற்கும்.
பின் மீண்டும் எதிர்புறமாக இழுத்தால் டெக்ஸ்ட் வேகமாக நகரத் தொடங்கும். எந்த இடத்தில் டெக்ஸ்ட் வேண்டுமோ அங்கு மவுஸின் வீலை விட்டுவிட்டால் டெக்ஸ்ட் செல்வது நின்றுவிடும். இந்த ட்ரிக் அனைத்து புரோகிராம்களிலும் வேலை செய்யாது என்றாலும் பல இமெயில் புரோகிராம்களிலும், வேர்டிலும் மற்றும் சில இணைய தளங்களிலும் செயல்படுகிறது.
Download As PDF

No comments:

Post a Comment